சீமான் மீது வருண்குமார் அவதூறு வழக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்.!,
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூலை 2) இடைக்கால தடை விதித்துள்ளது.
தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சீமான் அவதூறாக பேசுவதாக வருண் குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சீமான் தரப்பில், "வருண் குமார் பற்றி சீமான் அவதூறாக எதுவும் பேசவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சீமான் மீது வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.