வேளச்சேரியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் .!

சென்னை

வேளச்சேரியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் .!

வேளச்சேரியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் சோதனை முறையில் வீடு வீடாக சென்று வழங்கும் அதிகாரிகள். 

முதற்கட்டமாக முதியவர், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குகின்றனர்.

வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், ஆகிய பொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. 

மாதந்தோறும் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

செய்தியாளர்

      S S K

இதனிடையே, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. 

இதனைக் கருத்தில்கொண்டு, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. 

எனினும், நீண்டகாலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், ‘வீடு தேடி ரேஷன் பொருட்கள்’ வழங்கும் திட்டத்தை தற்போது சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில்,

சென்னையில், சைதாப்பேட்டை மண்டலம், மற்றும் ஆயிரம் விளக்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக வீடு தேடி முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் பெயர் பட்டியலுடன் அதிகாரிகள் சரக்கு வாகனத்தில் ரேஷன் பொருட்களோடு வீடு தேடிச் சென்று வழங்கி வருகின்றனர். 

ரேஷன் கடைக்கு செல்ல முதியவர்களும் மாற்றுத் திறனாளிகளும் யாராவது ஒருவரின் உதவியை நாடி வந்த நிலையில் தற்போது வீடு தேடி வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.