த வெ க தலைவர் விஜய் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் சி பி ஐ .!
த வெ க விஜய் Vs சி பி ஐ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஜனவரி 12 டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயை, அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இன்று இரண்டாம் கட்ட விசாரணை நடக்கவிருந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மற்றொரு தேதியில் விசாரணையை வைக்குமாறு விஜய் விடுத்த கோரிக்கையை சிபிஐ ஏற்று கொண்டது.
இதனைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 19-ஆம் தேதி நடிகர் விஜய் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
