ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவியை தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம் செய்த பிஜி உரிமையாளர். !

பெங்களூர்

ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவியை தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம் செய்த பிஜி உரிமையாளர். !

பெங்களூர்: பெங்களூரில் தனது பிஜியில் தங்கியிருந்த கல்லூரி மாணவியின் அறையை இரவில் தட்டிய உரிமையாளர் தனது ஆசைக்கு இணங்க வேண்டும்.

அப்போது, தான் பிஜியில் தங்கவும், உணவும் வழங்குவேன் என்று கூறினார். அதற்கு மறுத்த நிலையில் மாணவியை காரில் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிஜி விடுதி நடத்தி வருபவர் அஷ்ரப். இவரது பிஜியில் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி பயிலும் மாணவிகள் தங்கியுள்ளனர்.

பிஜியில் தங்கும் வசதி மட்டுமின்றி உணவும் வழங்கப்பட்டு வருகிறது. தங்கும் இடம் மற்றும் உணவு ஒரே இடத்தில் கிடைப்பதாலும் இந்த பிஜியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் வந்து தங்கினார்.

இந்நிலையில் பிஜிக்கு வந்த கல்லூரி மாணவி மீது அஷ்ரப்புக்கு ஆசை வந்துள்ளது. சம்பவத்தன்று இரவில் மாணவி தனது பிஜி அறையில் இருந்தார். அப்போது அஷ்ரப் அங்கு சென்றார். மாணவியின் அறை கதவை தட்டினார். மாணவி கதவை திறந்து பார்த்தார். பிஜியின் உரிமையாளர் என்பதால் அவர் பேச்சு கொடுத்தார்.

இந்த சமயத்தில் அஷ்ரப், மாணவியிடம் ''நீங்கள் பிஜியில் தங்கி உணவு சாப்பிட வேண்டும் என்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும். என்னுடன் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதற்கு கல்லூரி மாணவி மறுத்துள்ளார். இதனால் கோபமான அஷ்ரப், மாணவியை பிஜியில் இருந்து தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றி கடத்தினார். அதன்பிறகு தனது அறைக்கு இழுத்து சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பிறகு மாணவியை பிஜியில் 'டிராப்' செய்துவிட்டு அஷ்ரப் சென்றுள்ளார். இதுதொடர்பாக மாணவி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஷ்ரப்பை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சம்பவம் பெங்களூரை அதிர வைத்துள்ளது.