மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.!

மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை ஆய்வ செய்யும் பணி தொடங்கி உள்ளது.

இதற்கு காலக்கெடு எதுவும் இன்றி மேல்முறையீடு விண்ணப்பங்கள் நேரடியாக பரிசீலனை செய்யப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. இந்த திட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒருவேளை நீங்கள் இந்த முறை விண்ணப்பம் செய்து.. பணம் வரவில்லை என்றால்..எளிதாக நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். அதன் மூலம் நீங்கள் பணமும் பெற முடியும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. இந்த நொடியில் தமிழ்நாட்டில் இரண்டு கோடி பேர் வரை இந்த திட்டம் மூலம் நேரடியாக நிதி பெறுகிறார்கள். முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.

இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும் டிசம்பர் 13ம் தேதி முதல் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.