ஜெகதேவி துரை மார்டன் (சிபிஎஸ்இ) பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு- 2026 கொண்டாட்டம்.!
கிருஷ்ணகிரி
ஜெகதேவி துரை மார்டன் (சிபிஎஸ்இ) பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு- 2026 கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, தண்ணீர் பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ) யில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு- 2026 வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதில் நிர்வாக இயக்குனர் அ.சிந்து வரவேற்புரை ஆற்றினார். பள்ளித் தாளாளர் ம.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மற்றும் சிறப்பு விருந்தினராக பள்ளி நிறுவனர் ஜே. டி .மணி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் செய்திருந்தனர் விழா முடிவில் பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
