கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிக்கான ஆணைகளை வழங்கிய எம்.எல்.ஏ.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிக்கான ஆணைகளை வழங்கி பேசுகையில் வேலை தேடி சென்ற காலம் போய் இன்று நம்மைத் தேடி வேலை வந்துகொண்டு இருக்கும் நிலமையை மாற்றி அமைத்தவர் தமிழக முதல்வர் என்று சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் புகழாரம்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாமினை நடத்தியது,

இதில் Honda, அசோக் லேலண்ட், TVS, Maruthi, Titan போன்ற 120 பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த முகாமில் 8 ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு, மேல்நிலைப் படிப்புகள் முடித்த இளைஞர்களுக்கு 5 ஆயிரம் காலிபணியிடங்கள் நிரப்பும் வகையில் முகாமில் கலந்துக் கொண்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்தனர்.
இதில் முதற்கட்டமாக சுமார் ஆயிரம் இளைஞர்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தனர். முதல் மூன்று மாதங்களுக்கு பயிற்சியுடன் மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு பின் தகுதிக்கேற்ப ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள் வழங்கி பேசுகையில், வேலை தேடி சென்ற காலம் போய் இன்று நம்மைத் தேடி வேலை வந்துகொண்டு இருக்கும் நிலைமையை மாற்றி அமைத்தவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரி சங்கர், கல்லூரி முதல்வர் கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
