காங்கிரஸ் கட்சி சார்பில் 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வேலை இல்லாத் திட்டத்தை போக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை மாற்றும் மத்திய அரசின் அடக்குமுறை ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர்கள் கலந்துகொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கிராம கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு மாவட்டத் துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் லலித் ஆண்டனி, டாக்டர் தகி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி, மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், எஸ்.சி எஸ்.டி பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ராஜா குமாரவேல், நாஞ்சில் ஜேசு, நாராயண மூர்த்தி, ரயில்வே திட்டக்குழு உறுப்பினர் ரகமத்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் வினாயகம் ஆகியோர்கள் முன்னிலை வகித்து மத்திய அரசின் போக்கினை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்கள்.
மேலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக
முன்னாள் முதல்வர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கிடும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயரிடப்பட்டு கிராமப்புற மக்களின் குறைந்த பட்ச கிராம பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்திட, மக்களவை கூட்டத் தொடரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது.
இதிலிருந்து மகாத்மாகாந்தியின் மீது பா.ஜ.க. வைத்திருக்கும் வன்மம் வெளிப்படுகிறது. எனவே, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் இந்த எண்ணத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட பொது செயலாளர் அப்சல், முன்னாள் நகர தலைவர் இருதயம், வட்டாரத் தலைவர்கள் அயோத்தி, சித்திக், கல்லாவி ரவி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜாவித் கான் ஆடிட்டர் வடிவேல் , மாவட்ட கலை பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, சசிகுமார் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முபாரக், சக்திவேல், ஜெயவேல், கிருஷ்ணமூர்த்தி, முனியப்பன், சக்கரவர்த்தி, ஆஜித் பாஷா, ஷாநவாஸ், மீனவர் அணி செல்வம், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஷபிக்அகமத், வட்டார பொறுப்பாளர் மாரியப்பன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சக்திவேல், அன்பரசு, ராஜேந்திரன், ராமச்சந்திரன், ஏழுமலை, முயின், முஸ்தாக் , கமல் கான், ஆறுமுகம், கண்ணன், இளையராஜா, ராகுல் பேரவை குட்டி என்கின்ற விஜயராஜ், மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
முடிவில் கருணா மூர்த்தி நன்றி உரையாற்றினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
