ஸ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் திருக்கோயில் பக்தர்கள் வசதிக்காக கழிப்பிட கட்டிடம் கட்டித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள வசந்தபள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் திருக்கோயில் பக்தர்கள் வசதிக்காக கழிப்பிட கட்டிடம் கட்டித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பிலைப்பள்ளி ஒன்றியம், பில்லனுக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட, வசந்தபள்ளி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ சீதா ராமர் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது.
இந்த திருக்கோயிவிலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இருந்து நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர்,
ஆகையால் பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் அருகில் கழிப்பிட கட்டிடம் இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அவல நிலையை போக்கிடும் வகையில் ஸ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் திருக்கோவில் விஜயன் சுவாமிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவினைக் கொடுத்தார்.

அந்த மனுவில் மிகவும் பழமைவாய்ந்த ஶ்ரீ சிதா ராமர் ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் அவர்களின் வசதிக்காக ஒரு கழிப்பிட கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இது குறித்து விஜயன் சுவாமிகள் கூறுகையில்.....
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஶ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமி மிகவும் சந்தி வாய்ந்ததாக கருதப்படுவதால் தினமும் பக்தர்கள் வந்து செல்வதால் கழிப்பிட கட்டிடம் இல்லாதது பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் இந்த திருக்கோவிலுக்கென ஒரு கழிப்பிட கட்டிடம் கட்டிக்கொடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது திருக்கோவில் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
