தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்.!
BJP
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர்களான அருண் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
