சப் இன்ஸ்பெக்டர் 4 முறை வன்கொடுமை செய்தார், இளம் மருத்துவர் தற்கொலையில் புதிய திருப்பம். !

மகாராஷ்டிரா

சப் இன்ஸ்பெக்டர் 4 முறை வன்கொடுமை செய்தார், இளம் மருத்துவர் தற்கொலையில் புதிய திருப்பம். !

மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டம் பால்டனில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேற்று இரவு இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்கொலைக்குப் பின் எழுந்துள்ள தகவல்கள் சதாரா காவல்துறையிலும் சுகாதாரத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்கொலை செய்யும் முன், மருத்துவர் தனது கையில் எழுதிய "தற்கொலைக் குறிப்பில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பட்னே நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், காவல் அதிகாரி பிரசாந்த் பங்கர் தொடர்ந்து மனதளவில் சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரே, மருத்துவ பரிசோதனை தொடர்பாக காவல்துறையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இளம்பெண் மருத்துவர் விசாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தனக்கு நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளப்படுவதாகவும், தற்கொலைக்கு முன் அவர் தனது உயர் அதிகாரிகளிடம் புகாரும் அளித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தற்கொலை செய்த காரணம் மன அழுத்தத்தால் மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர்ந்த துன்புறுத்தல்களும் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சதாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்