சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜீவகனின் பிறந்த நாள் விழா. !
கிருஷ்ணகிரி

சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜீவகனின் பிறந்த நாளினை முன்னிட்டு ஆதரவற்ற பெற்றோர் ஆலயத்தில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் விழா நடைபெற்றது.
சமுக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஜீவகனின் 17 வயது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள ஆதரவற்ற பெற்றோர் ஆலயத்தில் நடைபெற்றது.
சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலசங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
டாக்டர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கேக் வெட்டி ஆதரவற்ற பெற்றோர்களுடன் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய டாக்டர் சந்திரமோகன் வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர்களை நாம் போற்றி வணங்க வேண்டிய தெய்வங்கள், அவர்களை விட தெய்வங்கள் யாரும் இல்லை என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இந்த விழாவில் காப்பகத்தில் உள்ள அனைருக்கும் கேக், பழம் , பிஸ்கட் ஆகியவை வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அப்போது நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெய்சன் மற்றும் நுகர்வோர் அமைப்பை சேர்த்த நிர்மல், சுதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ