CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.!
தமிழகம்

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது.
இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.
CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அறிக்கை மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.