மா விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் சௌஹான் சிவ்தாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். !
சட்டப் பேரவை

மா விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் சௌஹான் சிவ்தாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். !
மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் -
மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட #FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிடவும் -
மாம்பழக் கூழுக்கான #GST-யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திடவும் -
பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்தவும் வலியுறுத்தி -
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் சௌஹான் சிவ்ராஜ்j ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.