பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் விழா .!
த வெ க
வேப்பனஹள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் துணை செயலாளரும் தொழிலதிபருமான வேப்பனப்பள்ளியை சேர்ந்த சலீம் பாஷா தமிழக வெற்றி கழகத்தின் வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நாகராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சலீம் பாஷாவுக்கு பொன்னாடை அணிவித்தும் புதிய உறுப்பினர் அட்டையும் வழங்கி வரவேற்றனர்.
மேலும் இதேபோல வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகரான ஜி.எம்.எஸ்.முஜீப் மற்றும் சமூக ஆர்வலர் திருமதி நவீன் தாஜ் உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது ஒன்றிய இணை செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் முருகேஷ் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை அமைப்பாளர் .அஸ்வத், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வாசு, நாச்சிகுப்பம் கிளை செயலாளர் முருகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் அசோக் பாபு, பைரவா, பிரசன்னா குமார் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
