கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய மூன்று சட்ட மன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய மூன்று சட்ட மன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு. !

கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய மூன்று சட்ட மன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தனது விருப்ப மனுவினை தமிழக விவசாய அணியின் மாநில தலைவர் பவன்குமாரிடம் முன்னாள் மாவட்டத் தலைவர் எல் சுப்பிரமணியன் வழங்கினார்.

தமிழக முழுவதும் வருகின்ற  2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுவினை வழங்கலாம் என்று ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும்  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பொருந்தகை அவர்கள் அறிவித்து இருந்தார்.

இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் வேப்பனஹள்ளி  ஆகிய மூண்று சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டி வாய்ப்பு கேட்டு கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் அவர்கள் இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக விவசாய அணியின் மாநில தலைவர் பவன்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அருள் பெத்தயா , மாநில துணைத் தலைவர் சௌர்ணா சேதுராமன், மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் ஆகியோரிடம் முன்னாள் மாவட்டத்தலைவர் எல் சுப்பிரமணியன் தனது விருப்ப மனுவினை வழங்கினார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ