33 குடும்பங்களை கண்ணீருடன் சந்தித்த விஜய் - "நான் உங்களோட தான் இருக்கேன்" என ஆறுதல்.!

த வெ க

33 குடும்பங்களை கண்ணீருடன் சந்தித்த விஜய் - "நான் உங்களோட தான் இருக்கேன்" என ஆறுதல்.!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தற்போது சந்தித்து, கண்ணீருடன் ஆறுதல் கூறி வருகிறார்.

இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள 33 குடும்பங்களை அவர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசி வருகிறார். இந்தச் சந்திப்பின்போது விஜயுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லாமல், தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான கூடுதல் நிதியுதவிகளை வழங்குவதற்காக, அவர்களின் முக்கியக் கோரிக்கைகளான சுயதொழில் தொடங்குதல், சொந்த வீடு கட்டுதல் அல்லது சீரமைத்தல், கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட விவரங்களைத் தனித்தனியாக எழுத்துபூர்வமாகவும் விஜய் பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு உதவ அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.