"50 சதவீதம் வரி போட்டாச்சு". இன்னும் 250 % வரி போட திட்டமிடும் அமெரிக்கா.? ஆனந்த் மஹிந்த்ரா கருத்து. !

இந்தியா

"50 சதவீதம் வரி போட்டாச்சு". இன்னும் 250 % வரி போட திட்டமிடும் அமெரிக்கா.? ஆனந்த் மஹிந்த்ரா கருத்து. !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான பதிலடி நடவடிக்கையாக இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கின்றது தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால், தற்போது இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து வளர்ச்சியை நோக்கி நகர இரண்டு பரிந்துரைகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் முதன்மையாக, "தொழில் செய்வதை எளிதாக்கும் செயல்முறைகளை தீவிரமாக மேம்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்துகிறார். அனைத்து முதலீட்டுக்கும் உண்மையிலான ஒற்றைச் சாளர அனுமதி முறை தேவைப்படுவதாக கூறிய அவர், விருப்பமுள்ள மாநிலங்கள் தேசிய ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றும், அது இந்தியாவை உலகின் முதலீட்டு மையமாக மாற்றும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், "அந்நிய செலாவணி வருமானமாக சுற்றுலாவை செயல்படுத்துவது" முக்கியமாகும் என்றும் அவர் கூறினார். சுற்றுலா துறையின் முழுமையான திறனை வெளிக்கொணர அரசு திட்டமிட வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா பரிந்துரைத்துள்ளார்.

மேலும், MSME களுக்கான பணப்புழக்க ஆதரவு, உள்கட்டமைப்பு மேம்பாட்டு வேகம், PLI திட்டத்தின் விரிவாக்கம், உற்பத்தி உள்ளீடுகளின் வரி சலுகை, மற்றும் இறக்குமதி வரிகளில் பகுத்தறிவான மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மற்றவர்கள் தங்கள் தேசத்தை முதன்மைப்படுத்துவதை குறை சொல்ல முடியாது; ஆனால் நாமும் நம் தேசத்தை சிறந்ததாக மாற்ற தூண்டப்பட வேண்டும்" என்ற வாக்கியத்துடன் தனது பதிவை முடித்துள்ளார்.