ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுக்கு இரவு விருந்தில் வழங்கப்பட்ட குச்சி காளான். ! விலை எவ்வளவு தெரியுமா கிலோ 50 ஆயிரமாம். !

குச்சி காளான்

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுக்கு இரவு விருந்தில் வழங்கப்பட்ட குச்சி காளான். ! விலை எவ்வளவு தெரியுமா கிலோ 50 ஆயிரமாம். !

இந்தியாவுக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கிய பிரமாண்ட இரவு விருந்தின் மெனுவில் இடம்பெற்றிருந்த, மிகவும் விலையுயர்ந்த 'குச்சி' காளான்கள் (Gucchi Mushrooms) தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த விருந்தில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவாகும்.

இரவு உணவில் சிறப்பு ஈர்ப்பாக காஷ்மீரி உணவான 'குச்சி தூன் செடின்' பரிமாறப்பட்டது. இது 'குச்சி' காளான்களால் தயாரிக்கப்பட்டது. குச்சி காளான்கள் மிகவும் அரிய வகை காளான்கள் ஆகும். அவை ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இமயமலைப் பகுதிகளில் மட்டுமே இயற்கையாக வளரும்.

பனி உருகிய பிறகு, தனித்துவமான மண் மற்றும் வெப்பநிலை நிலைகளில் வசந்த காலத்தில் மட்டுமே அவை இயற்கையாக வளர்கின்றன. சில நேரங்களில் காட்டுத் தீக்குப் பிறகும் முளைப்பதுண்டு.

சந்தையில் இந்த குச்சி காளான்களின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை உள்ளது. சில சமயங்களில் இதன் விலை ரூ.50,000யை கூடத் தாண்டும். இந்த காளான்களைச் சேகரிப்பது மிகவும் கடினமான பணியாகும். உள்ளூர்வாசிகள் மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணித்து அவற்றைச் சேகரிப்பார்கள்.

பாரம்பரிய காஷ்மீரி உணவுகளான குச்சி புலாவ், யக்னி மற்றும் ரோகன் ஜோஷ் போன்றவற்றைத் தயாரிக்கவும் இந்த அரிய வகை காளான்கள் பயன்படுத்தப்படுகின்றன.