பாரத் ஸ்டேட் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுடன் நடைபெற்ற பொங்கல் விழா.!

கிருஷ்ணகிரி

பாரத் ஸ்டேட் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுடன் நடைபெற்ற பொங்கல் விழா.!

காவேரிப்பட்டணத்தில் அமைந்துள்ள பாரத் ஸ்டேட் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் கிழக்கு மாவட்ட முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அமைந்துள்ள 
பாரத் ஸ்டேட் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வங்கியின் வாடிக்கையாளர்களுடன் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவிற்கு பாரத் ஸ்டேட் வங்கியின் மேலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொங்கல் விழாவினை முன்னிட்டு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இடையே பானை உடைத்தல், மியூசிக்கல் சேர், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதன் முன்னதாகசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் செங்கரும்புகள், மஞ்சள் கிழக்கு, மாவிலைத் தோரணங்கள் கட்டி சூரியக் கடவுளுக்கு புது மண்பானையில் பொங்கலிட்டு  பொங்கலோ, பொங்கல் என முழக்கமிட்டு வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில்  வெற்றி பெற்ற வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மிட்டஹள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான
எல்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசுககளை வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்த பொங்கல் விழாவில் வங்கி அலுவலர்களான கோபிகிருஷ்ணன், கிளட்சன் சகாயராஜ், அனந்தகிருஷ்ணா மற்றும் வாடிக்கையாளர்கள்  வின்சென்ட் , இருதயராஜ் குமரேசன் மற்றும் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ

,