சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் சுகாதார துறை அமைச்சர், டாக்டர் ஹெச். வி. ஹண்டே  99 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.!

ஹண்டே பிறந்த நாள் நிகழ்ச்சி

சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் சுகாதார துறை அமைச்சர், டாக்டர் ஹெச். வி. ஹண்டே  99 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.!

சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் சுகாதார துறை அமைச்சர், டாக்டர் ஹெச். வி. ஹண்டே  99 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.

நவீன் பைன் ஆர்ட்ஸ் ஆர். பன்னீர்செல்வம் சார்பில், சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில், நடைபெற்ற விழாவிற்கு, மூத்த பத்திரிகையாளர் டாக்டர் K.M. சிராஜூதின் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ ஜெகத்குரு ஆத்ம சைதன்யானந்த ஜி மகராஜ் கலந்து கொண்டு பேசினார்.

மோகனா ரிதம்ஸ் குழுவினருடன் திரைப்பட நடிகர் பூவிலங்கு மோகன், திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜீவா வர்ஷினி, ஹன்டே ராஜா, ஆகியோர்  பாடல்களைப் பாடினர்.

இந்த நிகழ்வில், மனிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன், காவல்துறை உயர் அதிகாரி டாக்டர் K. ராஜாராம், டாக்டர் இளைய கட்டபொம்மன், TUJ டி.எஸ்.ஆர்.சுபாஷ், எம்.டி.இராமலிங்கம், இட்லி இனியவன் உட்பட பலர் கலந்து கொண்டு ஆசிகள் பெற்றனர். தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வரும் நல் உள்ளங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கோவலன் S.B.விஜயன் தொகுத்து வழங்க, M.பீர்முகமது நன்றியுரை நிகழ்த்தினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ