போலீஸ் என கூறி பேருந்தில் சென்ற நபரை காரில் கடத்தி கத்தியை காட்டி மிரட்டி 40 லட்சம் பணம் பறிப்பு போலீஸ் விசாரணை.!
சென்னை
போலீஸ் என கூறி பேருந்தில் சென்ற நபரை காரில் கடத்தி கத்தியை காட்டி மிரட்டி 40 லட்சம் பணம் பறிப்பு போலீஸ் விசாரணை.
திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் மாபு ஜான் இவரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் சரவணகுமார்(55), இந்நிலையில் மாபுஜான் என்பவர் சென்னை மண்ணடியில் உள்ள நண்பர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

கேட்ட பணத்தை பெறுவதற்காக சரவணகுமாரை அனுப்பியுள்ளார்.
அவரும் சென்று மவுண்ட் ரோடு அருகே 40 லட்சத்தை பணத்தை பெற்றுக் கொண்டு பேருந்தில் ஏறி நேற்றிரவு 10.30 மணியளவில் வண்டலூர் அருகே சென்ற போது பேருந்தில் அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் சரவணகுமாரிடம் இருந்த பணப்பையை பிடிங்கியுள்ளனர்.
உடனே கத்தி கூச்சலிட்ட சரவணகுமாரிடம் போலீஸ் என கூறியுள்ளனர். அதே போல் பேருந்து ஓட்டுநரிடம் நாங்கள் போலீஸ் இந்த பையில் கஞ்சா வைத்துள்ளார் என பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
பின்னர் பேருந்தில் இருந்து பணப்பை மற்றும் சரவணகுமாரை கீழே இறக்கி, காரில் ஏற்றிக் கொண்டு நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணப்பையை பறித்துக் கொண்டு பொத்தேரி அருகே இறக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர் இது குறித்து சரவணகுமார் கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கிளாம்பாக்கம் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸ் என கூறி கத்தியை காட்டி வழிப்பறி செய்த நபர்கள் யார் என விசாரித்து தேடி வருகின்றனர்.
செய்தியாளர்
S S K
