அங்கன் வாடி மையத்தினை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.!

கிருஷ்ணகிரி

அங்கன் வாடி மையத்தினை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.!

போகனப்பள்ளி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன் வாடி மையத்தினை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள போகனப்பள்ளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட அங்கன் வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட கிழக்கு மாவட்ட  திமுக செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தினை குத்து விளக்கு ஏற்றி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் அங்கன் வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்காக பிளாஸ்டிக் இருக்கைகள், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களையும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

அப்போது ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, கலை இலக்கிய பகுத்தறி பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமசந்திரன் துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும திமுக கட்சியை சேர்ந்த  தக்காளி மாணிக்கம், நாரயணன், ரகு குமார், வடிவேல், ரஜினி முனிஷ், குணசேகரன், பையம்மாள்முருகன், பழனி முருகன், பால்ராஜ், கெளரப்பன், சங்கர், ஊர் கவுண்டர் முனியப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ