பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் .!
கிருஷ்ணகிரி

திருப்பத்தூரில் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தமிழக முதல்வராக வரவேண்டுமென வாழ்த்தினார்.
தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தேமுதிக கட்சி நிறுவனத் தலைவர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வருகை தந்த திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தமிழகத்தில் நீங்கள் முதல்வராக வர வேண்டுமென வாழ்த்தினர்.
பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேமுதிக வினர் மக்கள் மத்தியில் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர், குறிப்பாக எந்த ஒரு மக்கள் பிரச்சனையாக இருந்தாலும் தேமுதிகவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையை தீர்த்துவைப்பது மட்டுமின்றி மாணவ மாணவிகள் மற்றும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் சிறந்து வழங்குவதாக தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து கூறிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் கிருஷ்ணகிரியில் தேமுதிகவினர் மக்கள் தேதியில் சுறுசுறுப்பாக செயப்பட்டு வருவதாக தெரிவித்த டாக்டர் சந்திரமோகனை வெகுவாக பாராட்டி பேசினார்.மேலும் இந்த நிகழ்ச்சியின் போது தேமுதிக கட்சியின் பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணித்தலைவர் விஜய் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக, சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், சந்தித்து புத்தகம் வழங்கினார்.
அப்போது சமுக நுகர்வோர் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட துணைத் தலைவர் அன்பு மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகளான ஜெய்சன், பிரகாஷ், பாபு, ஞானசேரன், நாகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ