தங்கத்தின் விலை 12% முதல் 15% வரை குறையும் .! குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் கருத்து.!

தங்கம் விலை சரிவு

தங்கத்தின் விலை 12% முதல் 15% வரை குறையும் .! குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் கருத்து.!

சென்னை ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் டாலரின் மதிப்பில் 12% முதல்15 % வரை குறைய வாய்ப்புள்ளது என குவாண்ட் மியூச்சுவல் பண்ட் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தங்கம் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது என்று என்று குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில், சில்லறை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ரூ.96,960 ஆக உள்ளது. இது ஜிஎஸ்டியுடன் சேர்த்து சுமார் ரூ.99,868 ஆக உயரும்.

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹9,917 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹9,090 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹7,480 ஆகவும் உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங்ஸ்டார் ஆய்வு குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை 38% வரை குறையக்கூடும் என்று கணித்துள்ளார். மே 28 அன்று, சில்லறை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ரூ.96,960 ஆக இருந்தது. 3% ஜிஎஸ்டியுடன், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.99,868 ஆக இருந்தது.

தங்கத்தின் விலை உயர்வு நகை விற்பனையாளர்களைப் பாதித்துள்ளது. இந்தியாவின் பொற்கொல்லர்கள் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் (IBJA) கூற்றுப்படி, இந்தியாவில் தங்க நகை விற்பனை கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக 30% குறைந்து 1,600 கிலோவாக இருந்தது. தங்கத்தின் விலை சுமார் 5% வரை உயர்ந்துள்ளது. இதுவே விற்பனை குறைய காரணம்.

மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், அட்சய திருதியை நெருங்கிய நேரத்தில் தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்து மே 15 அன்று 10 கிராமுக்கு ரூ.92,365 ஆக இருந்தது. ஆனால், அதன்பிறகு தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது. இதனால் இப்போது தேவை குறைந்துள்ளது.

விலை உயர்வுக்கு காரணம்

சமீபத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களே காரணம். குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் ஏற்பட்ட வர்த்தக மோதல்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதினர். ஆனால் இப்போது அந்த சூழல் இல்லை. வர்த்தக போர் முடியும் சூழல் உள்ளது. சர்வதேச பிரச்சனைகள் சரியாகும் சூழல் உள்ளது. இதனால் தற்போது பல காரணிகள் தங்கத்தின் விலையை குறைக்கலாம்.

கடந்த சில மாதங்களாக நிலவிய பிரச்சனைகள் இப்போது இல்லை. அந்த வர்த்தக பிரச்சனைகள் முடிவதால் டாலர் மதிப்பு உயரும். இதனால் தங்கத்தின் மதிப்பு தானாக சரியும். இப்போது தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் 12-15% வரை குறைய வாய்ப்புள்ளதாக குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் தெரிவித்துள்ளது.

அதாவது 10 கிராம் தங்கத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறையலாம் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் தங்கம் சரியும் போது அதை மக்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தங்கம் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது என்று என்று குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை செய்துள்ளது.

விளம்பரம் & தொடர்புக்கு

          97 87 41 64 86