இலஞ்சி குமாரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .!

தென்காசி

இலஞ்சி குமாரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .!

இலஞ்சி குமாரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது 

தென்காசி அக் 23 

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு இலஞ்சி குமாரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை 5.50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியை சுந்தரம் பட்டர் ஹரி பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர் இவ்விழாவில் செயல் அலுவலர் ராதா அறங்காவலர் குழு தலைவர் பூவையா உறுப்பினர்கள் ராஜேந்திரன் கதிரவன் இசக்கி இசக்கியம்மாள் கட்டளைதாரர் பூங்குன்ற வேலாயுதம் இலஞ்சி திமுக பேரூர் செயலாளர் முத்தையா பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன் திருவிலஞ்சி குமரன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படி தீபாராதனைகள் நடைபெறுகிறது காலை மாலை வேலைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 27 ஆம் தேதி மாலையில் 6:20 மணிக்கு மேல் சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா 28ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மூலவருக்கு முழுக்காப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது அன்று இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் 29ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் ஊஞ்சல் வைபவமும் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

செய்தியாளர்

AGM கணேசன்