தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற அருண் சந்தோஷ் க்கு தமிழக துணை முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் .!
தென்காசி

சென்னையில் நடைபெற்ற விழாவில் தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற அருண் சந்தோஷ் க்கு தமிழக துணை முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
தென்காசி ஜூலை 23
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற சங்கரன் கோவிலை சேர்ந்த அருண் சந்தோஷ் க்கு நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை உரையாற்றினார்.
அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி கே சேகர் பாபு ஆகியோர் முன்னிலை உரை ஆற்றினார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மனோகர் என்பவரது புதல்வன் அருண் சந்தோஷ்க்கு டேக்வாண்டோ போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றதை பாராட்டி அவருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நேரில் பாராட்டினார். இந் நிகழ்ச்சியில்
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது இந்த மாணவர் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் பி இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
AGM கணேசன்